கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் பலி

கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் பலி

கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் பலி
Published on


கர்நாடகாவில் நிகழ்ந்த கார் விபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சித்துநைமா கவுடா உயிரிழந்தார்.

கர்நாடகாவில் சமீபத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜம்காந்தி  ( Jamkhandi)  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சித்துநைமா கவுடா. கோவாவில் இருந்து பாகல்கோட்டிற்கு தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது துளசிகெரி பகுதியில் இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் எம்எல்ஏ சித்துநைமா கவுடா பரிதாபமாக உயிரிழந்தார்.  ஜம்காந்தி ( Jamkhandi) தொகுதியில் பாஜக வேட்பாளரான குல்கர்னி ஸ்ரீகாந்தைவிட 2975 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருந்தார். 

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது சித்துநைமா கவுடா மரணத்தையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com