மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி முன்னிலை வகிக்கிறது.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு மொத்தமாக 40 தொகுதிகள் உள்ளன. மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
மிசோரமில் ஆட்சிமைக்க 21 தொகுதிகள் தேவை. அப்படியிருக்க மிசோ தேசிய முன்னணி கட்சி 25 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 9 இடங்களிலும் பாஜக 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. எனவே இங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில், டிஆர்எஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.