மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
மிசோரம் மாநிலத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இங்கு மொத்தமாக 40 தொகுதிகள் உள்ளன. கடந்த நவம்பர் 28-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் டிசம்பர் 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 21 தொகுதிகள் தேவை எனும் நிலையில், எம்என்எப் எனப்படும் மிசோரம் நேஷனல் பிரண்ட் கட்சிக்கு 16 முதல் 20 தொகுதி வரையும், காங்கிரஸ் கட்சிக்கு 14 முதல் 18 தொகுதிகள் வரையும் கிடைக்குமென ரிபப்ளிக் டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.