வினேஷ் போகட் முன்னிலை .. ஹரியானாவில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை அமைக்கிறதா காங். கூட்டணி?
ஹரியானாவில் ஆட்சியைப்பிடிக்கப் போவது யார்?
ஹரியானா சட்டப்பேரவைக்கு 90 உறுப்பினர் இடங்கள் இருக்கின்றன. பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், போட்டி நிலவிவருகிறது. ஏற்கனவே, ஹிரியான முன்னிலை நிலவரத்தை பொறுத்தவரை, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருந்தது..
இந்தவகையில், காலை 8.50 நிலவரப்படி காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 52 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும், மற்றவை 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
ஹிரியானா ஜூலானா தொகுதியில் களம் இறங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டும், முதலமைச்சர் வேட்பாளராக கருத்தப்படக்கூடிய பூபிந்தர் ஹூடாவும் தனது தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
ஹரியானாவை பொறுத்தவரை 8.50 நிலவரப்படி காங்கிரஸ் பாஜகவை விட அதிக இடங்களிலும், ஆனால், ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை பாஜகவிற்கும் - காங்கிரஸுக்கு நெக் டூ நெக் போட்டி நிலவும் சூழல் உள்ளது.
முந்தைய வெற்றி எப்படி இருந்தது?
2014
முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 47 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. இதன் மூலம்10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.
2019
ஆனால், 2019 தேர்தலில், முந்தைய தேர்தலை விட ஏழு இடங்கள் குறைந்து 40 இடங்களை மட்டுமே அக்கட்சியால் பெற முடிந்தது. 31 இடங்களை கைப்பற்றியிருந்த காங்கிரஸ், புதிதாக தொடங்கிய துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சியின் 10 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி வைத்து ஆட்சியை அமைத்து விடலாம் என்று முயற்சிகள் மேற்கொண்டது.
ஆனால், அது பலன் அளிக்காமல் போக, அந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்ட பாஜக துஷ்யந்த் சௌதலாவுடன் கைகோர்த்து ஆட்சியை அமைத்தது. அதற்கு பிரதிபலனாக துஷ்யந்த் சவுதாலாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
2024
இந்நிலையில், 2024 ஆம் ஆண்டான தற்போதைய சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து களம் காண்கிறது. காங்கிரஸ் உடன் கைகோர்த்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒரே ஒரு இடத்தில் போட்டியிடுகிறது.
ஒருபக்கம் ஜனநாயக் ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் ஆகியவை ஒரு கூட்டணியிலும், இந்திய தேசிய லோக்தள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றொரு கூட்டணியிலும் போட்டியிடும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி, ஹரியானா லோகித் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாகவே களம் காண்கின்றன என்பது கூடுதலான தகவல்.