மேற்கு வங்கம்: கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்

மேற்கு வங்கம்: கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்

மேற்கு வங்கம்: கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது காங்கிரஸ்
Published on

மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் 1977 முதல் 2011 வரை, 34 ஆண்டுகள் நடைபெற்ற இடதுசாரிகளின் ஆட்சிக்கு 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு கட்டியது.

2016-ம் ஆண்டு நடந்த மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை எதிர்க்க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது, கம்யூனிஸ்ட். இது பெரும் அரசியல் முரணாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் கூட்டணியிலும் கூட காங்கிரஸைக் காட்டிலும் குறைவான இடங்களையே பெற்றது கம்யூனிஸ்ட். திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இப்போதே மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களம் அனலைக் கிளப்பி வருகிறது.

முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அந்த மாநிலத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி அறிவித்துள்ளார். இதனால் மேற்குவங்க தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com