மகாராஷ்டிரா விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் போராட்டம்
மகாராஷ்டிரா விவாகாரத்தில் ஆளுநரின் முடிவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் பட்னாவிஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட உள்ளது. இதுகுறித்த வாதம் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தங்களுக்கே பெரும்பான்மை உள்ளது என சிவசேனா கூட்டணி கட்சியினர் ஆளுநர் மாளிகையில் கடிதம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா விவாகாரத்தில் ஆளுநரின் முடிவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிராவில் நடந்தது ஜனநாயகப் படுகொலை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மகாராஷ்டிரா விவகாரம் மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. எதிக்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவை 12 மணிவரையிலும், மாநிலங்களவை 2 வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.