காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் சில தலைவர்களையும் செயல்பாட்டாளர்களையும் சந்தித்துள்ளார். அவர்களில் சிலருக்கு கொரோனா உறுதியான நிலையில் இவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் சில அறிகுறிகள் இருந்ததால் வீட்டிலேயே சோனியாகாந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபாலுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீப நாட்களாக சோனியா காந்தியை சந்தித்த அவரின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. 2 நாள் பயணமாக உத்தரப்பிரதேச மாநிலம் சென்றுள்ள பிரியங்கா காந்தி தனது பயணங்களை ரத்து செய்துகொண்டு டெல்லி திரும்பியுள்ளார். கொரோனா பாதிப்பு இருந்தாலும் ஜூன் 8ஆம் தேதி சோனியா காந்தி அமலாக்கதுறை விசாரணைக்கு ஆஜராவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com