\
Congress suffered a major setback in the Legislative Council elections
Legislative Council electionsANI

மோடியின் தொகுதியில் பாஜக தோல்வி : சட்டமேலவைத் தேர்தலில் பகீர்.. சரிந்த காங்கிரஸ் செல்வாக்கு?

4 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை சந்தித்துள்ளது.
Published on: 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சட்டமேலவைகள் உள்ளன. இந்த சட்டமேலவைக்கு சுழற்சி முறையில் தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் கர்நாடகா , உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரா , பீகார் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள சட்டமேலவை தேர்தல் நடைபெற்றது.

இந்த 4 மாநிலங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கர்நாடகா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தமுள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளை பாஜகவும், ஒரு தொகுதியை பாஜக கூட்டணியில் இருக்கும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைப்பற்றியுள்ளன.

அதேபோல, உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 11 இடங்களுக்கான சட்டமேலவைத் தேர்தலில் பாஜக 6 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், பாஜகவை வீழ்த்தி சமாஜ்வாதி கட்சியின் லால் பிஹாரி யாதவ் வெற்றி பெற்றது இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

மேலும் பீகார் மாநிலத்தில் 8 சட்டமேலவை தொகுதிகளில் பாஜக 3 இடங்களையும் அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 1 இடத்தில வெற்றிபெற்றுள்ள நிலையில், பிரசாந்த் கிஷோரின் 'ஜன் சுராஜ் கட்சி' ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் சட்டமேலவையில் ஜன் சுராஜ் கட்சி முதல்முறையாக தனது கணக்கை தொடங்கியுள்ளது. அதேபோல பீகாரில் இரு சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

இது தவிர மஹாராஷ்டிராவில் நடைபெற்ற 5 சட்டமேலவை இடங்களுக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடி கூட்டணி 3 இடங்களையும், பாஜக கூட்டணி 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசின் சொந்த தொகுதியான நாக்பூரில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அதே போல தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு 2 இடங்களிலும், பாஜக மற்றும் சிவ் சேனா ஷிண்டே பிரிவு 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 28 சட்டமேலவை தொகுதிகளில் பாஜக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதேநேரம் பாஜக கூட்டணி 16 இடங்களிலும் எதிர்க்கட்சிகள் 10 இடங்களிலும் இரு இடங்களில் சுயேச்சைகளும் வெற்றிபெற்றுள்ளனர்.

Congress suffered a major setback in the Legislative Council elections
இஸ்ரேல் தேர்தலில் அதிரடி ட்விஸ்ட் : எழுச்சி பெற்ற அரபு கூட்டணி.. அதிரடி முடிவை எடுத்த இடதுசாரிகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com