ராணுவ ஒப்பந்தங்களை ஏடிஎம் போல கருதிய காங்கிரஸ் - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ராணுவ ஒப்பந்தங்களை பணம் அள்ளித்தரும் ஏடிஎம் இயந்திரங்களாக காங்கிரஸ் அரசுகள் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சோலனில் பரப்புரையில் ஈடுபட்டபோது பேசிய பிரதமர், இந்தியா தனது பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் தேவைக்கு 70% வெளிநாடுகளை சார்ந்திருந்ததாக குறிப்பிட்டார். ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடை வாங்குவதற்கு அனுமதி தருவதைக் கூட முந்தைய காங்கிரஸ் அரசு 6 ஆண்டுகள் தாமதப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
முதல்முறையாக வாக்களிக்கும் இளம் தலைமுறையினர் நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுமட்டுமின்றி நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் ராணுவ ஒப்பந்தங்களை பணம் அள்ளித்தரும் ஏடிஎம் இயந்திரங்களாக காங்கிரஸ் அரசுகள் பயன்படுத்தியதாக இமாசல பிரதேச மாநிலத்தில் மே 19ம் தேதி இறுதிக்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

