'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல்

'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல்
'காங். ஆட்சியில் மாதம் 9,000 தொலைபேசிகள் ஒட்டுக்கேட்பு' - வெளியான தகவல்

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்திலேயே தொலைபேசி இணைப்புகள், மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியாகியுள்ளது. 

கடந்த 2013ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் ப்ரோசென்ஜித் மோன்தால் என்பவர், தகவல்கள் பரிமாற்றம் உளவு பார்க்கப்படுவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளிக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த மத்திய அரசு, ஒவ்வொரு மாதமும் 7 ஆயிரத்து 500 முதல் 9 ஆயிரம் வரையிலான தொலைபேசி இணைப்புகள் உளவு பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தது. அத்துடன் 300 முதல் 500 வரையிலான மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்படுவதாகவும் பதில் அளித்தது. 

அண்மையில், கணினி தரவுகளை குறிக்கிடவும், கண்காணிக்கவும் 10 அமைப்புகளுககு மத்திய அரசு அதிகாரம் வழங்கியது. இந்த கண்காணிப்பு தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பாக விளக்கமளித்திருந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நாட்டின் பாதுகாப்பிற்காகவே கணினிகள் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த நடைமுறை காங்கிரஸ் ஆட்சிக்காலமான 2009லிருந்தே நடைமுறையில் உள்ளதாக விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சிலேயே தொலைபேசி இணைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் உளவு பார்க்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com