பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாpt web
இந்தியா
பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹாவின் அலுவலகத்தின் முன் குவிந்த காங்கிரஸார்
பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரை அடிப்படையில்தான் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், சிம்ஹாவின் அலுவலகம் முன் கூடிய காங்கிரஸார் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மக்களவையில் அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் பாஜக எம்.பி சிம்ஹாவின் அலுவலகத்தில் இருந்து அனுமதிச்சீட்டு பெற்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மைசூருவில் சிம்ஹாவின் அலுவலகத்தின் முன் திரண்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிம்ஹா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பிய அவர்கள், அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைப்பாட்டில், சிம்ஹாவிடம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை கைது செய்தனர்.