கம்பத்தில் ஏற்றும்போது கீழே விழுந்த காங்கிரஸ் கொடி: சோனியா காந்தி அதிர்ச்சி - வீடியோ

கம்பத்தில் ஏற்றும்போது கீழே விழுந்த காங்கிரஸ் கொடி: சோனியா காந்தி அதிர்ச்சி - வீடியோ

கம்பத்தில் ஏற்றும்போது கீழே விழுந்த காங்கிரஸ் கொடி: சோனியா காந்தி அதிர்ச்சி - வீடியோ
Published on
காங்கிரஸ் கட்சி விழாவின் போது கட்சி கொடியை சோனியா காந்தி ஏற்றியபோது கொடி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் 137வது ஆண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 137வது ஆண்டு கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, கொடி கம்பத்தில் தயாராக வைக்கப்பட்டிருந்த கட்சி கொடியை ஏற்றி வைக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கொடி கீழே அவரது கைகளில் வந்து விழுந்தது. உடனடியாக விரைந்து செயல்பட்ட அங்கிருந்த தொண்டர்கள் அந்த கொடியை எடுத்து சரி செய்து கொண்டு சென்றனர். பின்னர் வழக்கம் போல் நிகழ்ச்சிகள் தொடங்கின. கட்சிக் கொடி கீழே விழுந்ததால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் சிறிது பரபரப்பு நிலவியது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com