Modi & Amit shah
Modi & Amit shahFile Image

கர்நாடக பரப்புரை: பிரதமர் மோடி, அமித் ஷா மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் காலம் முடிந்ததற்குப் பிறகும் சமூகவலைதளங்களில் பரப்புரையில் ஈடுபட்டதாக பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினத்துடன் தேர்தல் பரப்புரையானது ஓய்ந்தது. ஆனால் நேற்று காலை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் சமூகவலைதளப் பக்கத்தில் கர்நாடகா தேர்தல் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அது தேர்தல் பரப்புரை போல இருக்கிறது என புகார்கள் எழுந்தன. இதற்கிடையில் அந்த வீடியோவினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் பகிர்ந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் விதிமுறைகளை பிரதமர் உட்பட பாஜகவின் மூத்த தலைவர்கள் மீறி உள்ளதாக கூறி தேர்தல் ஆணையத்தின் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் அந்த புகார் மனுவுடன் இணைத்து அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com