இந்தியா
புதிய தலைவர் யார்? காணொலி மூலம் காங்கிரஸ் ஆலோசனை
புதிய தலைவர் யார்? காணொலி மூலம் காங்கிரஸ் ஆலோசனை
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து காணொலியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொலி மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிய காங்கிரஸ் தலைவர் யார், பீகார் தேர்தல் தோல்வி, உள்ளிட்டவை பற்றியும் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல், மூத்த தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்கள் உள்ளிட்டவை பற்றியும் ஆலோசனை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தருண் கோகாய், அகமது படேல் மறைவுக்கு செயற்குழு கூட்டத்தில் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ஆலோசனையில் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, சிதம்பரம், அசோக் கெலாட், உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.