நாளைக் கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்! புதிய தலைவர் குறித்து ஆலோசனை?

நாளைக் கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்! புதிய தலைவர் குறித்து ஆலோசனை?

நாளைக் கூடும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம்! புதிய தலைவர் குறித்து ஆலோசனை?
Published on

பீகார் தேர்தல் தோல்வியை அடுத்து நாளை காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் கூடவுள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் பீகாரில் மூன்று கட்டங்களாக நடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி எண்ணப்பட்டது. லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் 70 தொகுதிகளில் போட்டியிட்டது.  எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதோடு, இக்கூட்டணி தோல்வியை சந்தித்தது.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக 74 இடங்களில் வெற்றிபெற்று புருவம் உயர்த்த வைத்தது. வெறும் 43 இடங்கள் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் பிடித்ததால் பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் பாஜகவின் ரேணுகா தேவி, தர்கிஷோர் பிரசாத் துணை முதல்வர்களாக பதவியேற்றார்கள்.

பீகாரில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில் எல்லாம் பாஜக எளிதாக வென்றது. அதோடு, 9 மாநில இடைத்தேர்தல்களிலும் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. இம்முடிவுகள், அடுத்த ஆறு மாதத்தில் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு தேர்தல்களில்ம் எதிரொலிக்கும் என்று பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உடல்நிலைக் காரணமாக கோவாவில் ஓய்வெடுத்து வருகிறார், சோனியா காந்தி. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதியது பரபரப்பானது.

இந்நிலையில், பீகார் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் ’காங்கிரஸ் சக்திவாய்ந்த எதிர்கட்சியாக இல்லை’ என்று குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தினார்.. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்ததை அடுத்து அதற்கான பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினார் ராகுல் காந்தி.

அதிலிருந்து, சோனியா காந்திதான் இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடந்த கூட்டத்திலும் தலைவரை தேர்ந்தெடுக்காமல் சோனியாவே ஆறு மாதங்களுக்கு இடைக்கால தலைவராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நாளைக் கூடும் கூட்டத்திலாவது தலைவரைத் தேர்ந்தெடுப்பார்களா என்று கட்சித் தொண்டர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com