ஆந்திராவில் தனித்துதான் போட்டி - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உம்மன்சாண்டி

ஆந்திராவில் தனித்துதான் போட்டி - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உம்மன்சாண்டி
ஆந்திராவில் தனித்துதான் போட்டி - காங்கிரஸ் பொதுச்செயலாளர் உம்மன்சாண்டி

ஆந்திராவில் வரும் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார். 

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட்டன. ஆனால் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறவில்லை. 

இந்நிலையில், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

அமராவதியில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சி தலைவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும் கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய அளவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது எனவும் ஆனால் மாநில அளவில் தெலுங்கு தேசத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி கிடையாது எனவும் தெரிவித்தார். 

மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் எனவும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மீண்டும் ஜனவரி 31 ஆம் தேதி ஆலோசனை நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும் பொது செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாகவும் துணிச்சல் மிகுந்த பிரியங்கா காந்தி போன்ற தலைவர்கள் தேசிய அரசியலுக்கு தேவை எனவும் தெரிவித்தார். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புவதாகவும் உம்மன்சாண்டி குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com