நெருங்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் - தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்

நெருங்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் - தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்
நெருங்கும் கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் - தீவிர ஆலோசனையில் காங்கிரஸ்

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி குழு ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூடியது.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழ்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வு காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பிரசாரம், தேர்தல் வாக்குறுதிகள் என்று பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

கூட்டத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால், மோகன் பிரகாஷ், கர்நாடக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவக்குமார், முன்னாள் முதல்வரும், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாஜக ஆட்சியில் இருக்கும் தென் மாநிலங்களில் ஏற்கனவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 20ஆம் தேதி கர்நாடகா மாநிலம் பெலகாவிl தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com