“மாற்று சக்தியாக ராகுலால் உருவாக முடியவில்லை” - திரிணாமுல் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

“மாற்று சக்தியாக ராகுலால் உருவாக முடியவில்லை” - திரிணாமுல் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
“மாற்று சக்தியாக ராகுலால் உருவாக முடியவில்லை” - திரிணாமுல் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடியை, ராகுல் காந்தியால் வீழ்த்த முடியாது என திரிணாமுல் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ஜகோ பங்களாவில் ராகுல் காந்தியை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் மோடிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க ராகுல் காந்தி தவறிவிட்டார் என்றும், மம்தா பானர்ஜி அதில் வெற்றி பெற்றுவிட்டார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா பதிலடி கொடுத்துள்ளார். பிற கட்சிகளின் தலைவர்களை இழிவுபடுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை கட்டி எழுப்பமுடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், ஒற்றுமைக்கு எதிராக செயல்படக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com