\
உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை - காங்கிரஸ் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை - காங்கிரஸ் வலியுறுத்தல்

உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை - காங்கிரஸ் வலியுறுத்தல்
Published on

உத்தர பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

அப்பாவிக் குழந்தைகள் உயிரிழந்த மிகப் பெரும் தவறை மாநில பாரதிய ஜனதா அரசு மூடி மறைக்கப் பார்ப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இந்த அலட்சிய சம்பவத்துக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சுகாதார அமைச்சர் மற்றும் அரசு மருத்துவனையின் தலைவர் ஆகியோர்தான் பொறுப்பு என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய மருத்துவச் சங்கம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com