ஹனுமன் கட் அவுட் முன்பு போஸ் செய்த பெண் பாடி பில்டர்ஸ்: வார்த்தைமோதலில் காங்கிரஸ் - பாஜக!

ஹனுமன் கட் அவுட் முன்பு போஸ் செய்த பெண் பாடி பில்டர்ஸ்: வார்த்தைமோதலில் காங்கிரஸ் - பாஜக!
ஹனுமன் கட் அவுட் முன்பு போஸ் செய்த பெண் பாடி பில்டர்ஸ்: வார்த்தைமோதலில் காங்கிரஸ் - பாஜக!

மத்திய பிரதேசத்தில் நடந்த பாடி பில்டிங் போட்டியில் ஹனுமன் கட் அவுட் முன்பு பெண் பாடி பில்டர்ஸ் போஸ் செய்தது பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தை மோதலுக்கு வழிவகுத்துள்ளது.

மார்ச் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மத்திய பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் பாடி பில்டிங் போட்டி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் சைதன்ய காஷ்யப் ஆதர்வுடன் பாஜக ஏற்பாடு செய்திருந்த இந்த போட்டியில், மத்தியபிரதேசத்தின் பாஜக மேயர் பிரஹ்லாத் பட்டேல் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், பெண் பாடி பில்டர்ஸ் ஹனுமன் கட் அவுட் முன்பு போஸ் செய்த வீடியோக்கள் இணையங்களில் பரவி வைரலானது.

இதனையடுத்து, அந்த இடத்தை கங்கை புனித நீர் மற்றும் ஹனுமன் மந்திரங்களை வைத்து சுத்திகரிப்பு செய்தனர் காங்கிரஸார். இது ”அநாகரிக செயல்” என்று குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் பாரஸ் சக்லேசா, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த பட்டேல் மற்றும் காஷ்யப் மீது குற்றஞ்சாட்டினார். மேலும் அவர்களை ஹனுமன் தண்டிப்பார் என்றும் கூறியிருந்தார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சௌகானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுக்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”இது இந்துக்கள் மற்றும் கடவுள் ஹனுமனை இழிவுபடுத்தும் செயல்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் அந்த வைரல் வீடியோவை பகிர்ந்து மத கடவுள்களை பாஜக அவமதிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பாஜக செய்தி தொடர்பாளர் ஹிடேஷ் பாஜ்பாய், பெண்கள் விளையாட்டுகளில் சிறந்துவிளங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை. சில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் காங்கிரஸ் தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பெண்கள் குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நீச்சல் போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பதை காங்கிரஸாரால் பார்க்கமுடியவில்லை. ஏனெனில் அவர்களுக்குள் இருக்கும் சாத்தான் இதனை பார்க்கும்போது விழித்துக்கொள்கிறது. விளையாட்டுக்களத்தில் உள்ள பெண்களை அவர்கள் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதுகுறித்து அவர்களுக்கு வெட்கமாக இல்லையா?” என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com