ரூ.20 லட்சம் நிலத்தை ரூ.2.50 கோடிக்கு வாங்கிய ராமர் கோயில் அறக்கட்டளை - காங்கிரஸ் புகார்

ரூ.20 லட்சம் நிலத்தை ரூ.2.50 கோடிக்கு வாங்கிய ராமர் கோயில் அறக்கட்டளை - காங்கிரஸ் புகார்
ரூ.20 லட்சம் நிலத்தை ரூ.2.50 கோடிக்கு வாங்கிய ராமர் கோயில் அறக்கட்டளை - காங்கிரஸ் புகார்
ராமர் கோயிலுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலம், ரூ.2.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், ராமர் கோயிலுக்காக ரூ.2 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.18.5 கோடி மதிப்பில் வாங்கியதாக சமீபத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
இந்த புகாரால் ஏற்பட்ட சலசலப்பு அடங்குவதற்குள், நேற்று மேலும் ஒரு புகாரை காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. அதாவது, ராமர் கோயிலுக்காக ரூ.20 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரூ.2.50 கோடிக்கு வாங்கியதாக கூறப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ''அயோத்தியில் 890 மீட்டர் நிலம் ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் ரூ.20 லட்சத்துக்கு வாங்கிய பாஜக தலைவர் ஒருவர், அதை ரூ.2.50 கோடிக்கு ராமர் கோயில் அறக்கட்டளைக்கு விற்றிருக்கிறார். இதன் மூலம் 79 நாட்களில் 1,250% லாபம் பார்த்துள்ளார்.
ராமபிரான் பெயரில் அயோத்தி பாஜக தலைவர்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றம் உத்தரவின்பேரில்தான் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு கடமை இல்லையா? உச்ச நீதிமன்றம் தனக்கு இருக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். ராமர் கோயில் கட்டுமான பணிக்கான ஒட்டுமொத்த பணப்பரிமாற்றத்தையும் தனது மேற்பார்வையின் கீழ் தணிக்கை செய்து, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
அதைப்போல ராமர் கோயில் அறக்கட்டளையை அமைத்தவர் பிரதமர் மோடி. அவருக்கும் இதில் உண்மையை கண்டறியும் கடமை இருக்கிறது. எனவே இது குறித்து அவரும் விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com