காங்கிரஸ் - பாஜக ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் விலையின் வேறுபாடு - ராகுல் காந்தி வெளியீடு

காங்கிரஸ் - பாஜக ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் விலையின் வேறுபாடு - ராகுல் காந்தி வெளியீடு
காங்கிரஸ் - பாஜக ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் விலையின் வேறுபாடு - ராகுல் காந்தி வெளியீடு

முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும், தற்போதைய பாஜக ஆட்சிக்காலத்திலும் பெட்ரோல், டீசல் விலைகளில் இருந்த வேறுபாட்டை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "2014-ம் ஆண்டு ஆட்சியில் இருந்து காங்கிரஸ் வெளியேறுகையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் எரிபொருள் கலனை நிரப்ப 714 ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் தற்போது அது 1,038 ரூபாயாக அதிகரித்துவிட்டது. காரின் எரிபொருள் கலனை முழுவதுமாக நிரப்ப 2014-இல் 2,856 ரூபாய் செலவானது. தற்போது அது 4 ,152 ரூபாயாக அதிகரித்திருக்கிறது. டிராக்டரில் எரிபொருள் நிரப்ப 2014-இல் 2,749 ரூபாய் தேவைப்பட்ட நிலையில், தற்போது அதற்கு 4,563 ரூபாய் தேவைப்படுகிறது. லாரிக்கு எரிபொருள் நிரப்ப 11,456 ரூபாய் தேவைப்பட்டது. இப்போது அது 19,014 ரூபாய் ஆகிவிட்டது. எரிபொருள் மூலமாக மக்களின் பணத்தை இந்த அரசு திருடி வருகிறது" என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com