காங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி ராஜினாமா - பாஜகவில் இணைகிறாரா?
கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கே.சி.ராமமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகா அரசியலில் கடந்த ஒரு வருடமாகவே மிகவும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. கர்நாடகா சட்டப்பேரவையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சியிலிருந்து சில தலைவர்கள் பாஜக செல்ல போவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தச் சூழலில், கர்நாடகா மாநிலத்தின் மாநிலங்களவை எம்பியான கே.சி.ராமமூர்த்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரது ராஜினாமா கடித்தத்தை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஏற்றுள்ளார். கே.சி.ராமமூர்த்தி கடந்த வாரம் கர்நாடக பாஜக தலைவர்கள் சந்தித்து பேசினார் என்ற தகவல் வெளியானது. மேலும் அவர் பாஜகவில் தற்போது இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.சி.ராமமூர்த்தி கடந்த 2016ஆம் ஆண்டு கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வானர். இவர் அரசியலுக்கு வரும் ஐபிஎஸ் பதவியில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.