பார்ப்பவர்களை ஈர்க்கும் ’அமுல்’ நிறுவனத்தின் வித்யாசமான ரக்‌ஷாபந்தன் வாழ்த்து!

பார்ப்பவர்களை ஈர்க்கும் ’அமுல்’ நிறுவனத்தின் வித்யாசமான ரக்‌ஷாபந்தன் வாழ்த்து!

பார்ப்பவர்களை ஈர்க்கும் ’அமுல்’ நிறுவனத்தின் வித்யாசமான ரக்‌ஷாபந்தன் வாழ்த்து!
Published on

இந்தியா முழுக்க சகோதரத்துவத்தை கொண்டாடும் ரக்‌ஷாபந்தன் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அக்கா, தங்கைகள் பாசத்தை வெளிப்படுத்த தங்கள் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்டிவிடுவதோடு இனிப்புகளை வழங்கி கொண்டாடுவார்கள். இந்நிலையில், இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான பிரபல அமுல் நிறுவனம் தனது ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகளை வித்யாசமாக வெளிப்படுத்தியுளது.  

அமுல்’ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது, அதன் சின்னமான சிறுவன், சிறுமி இருக்கும் ஓவியம்தான். இன்று, அந்தச் சின்னத்தில் இருக்கும் அமுல் சிறுமி, தனது சகோதரன் கையில் ராக்கி கட்டுவதுபோல் ட்வீட் செய்து ரக்‌ஷாபந்தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது அமுல் நிறுவனம். ’எப்போதும் அழகிய கெளனில் வரும் அமுல் பேபி சிறுமி, இதில் கொஞ்சம் வளர்ந்ததுபோல் சுடிதார் அணிந்துகொண்டு தனது சகோதரனுக்கு கிஃப்ட் கொடுத்துவிட்டு ராக்கியை மணிக்கட்டில் கட்டும் ஓவியம் பார்க்கும்போதே நெகிழ்ச்சியாக உள்ளது’ என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com