\
சிறப்பாக செயல்படாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு: உபி அரசு அதிரடி

சிறப்பாக செயல்படாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு: உபி அரசு அதிரடி

சிறப்பாக செயல்படாத அதிகாரிகளுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு: உபி அரசு அதிரடி
Published on

சிறப்பாக செயல்படாத அதிகாரிகளுக்கு 50 வயதில் ஓய்வு வழங்கும் அறிவிப்பை உத்தரபிரதேச அரசு வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து, அவ்வப்போது அரசு அலுவலகங்களை பார்வையிட்டு, பணிகளை சரிவர செய்யாத அதிகாரிகளுக்கு உடனடியாக தண்டனையும் அளித்து வருகிறார்.

அந்த வகையில், அரசு அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சரிவர செயல்படாத அதிகாரிகள், 50 வயது மற்றும் அதை கடந்தவராக இருந்தால், அவர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை அம்மாநில தலைமைச்செயலாளர் வெளியிட்டார். மோடி தலைமையிலான மத்திய அரசு, சில குறிப்பிட்ட துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 50 ஆக குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில், யோகி ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பு உபி அரசு ஊழியர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com