ரூ. 2 லட்சம் பணம் திருட்டு.. வேலைக்காரர் மீது புகார் அளித்த கருணாஸ் பட நடிகை!

ரூ.2 லட்சம் பணத்தைத் திருடியதாக தன் வீட்டு வேலைக்காரர் மீது நடிகையும் பாஜக வேட்பாளருமான நவ்நீத் ராணா கவுர் புகார் அளித்துள்ளார்.
நவ்நீத் ராணா கவுர்
நவ்நீத் ராணா கவுர்ட்விட்டர்

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி தனி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற கருணாஸ் பட (அம்பாசமுத்திர அம்பானி திரைப்படம்) நடிகை நவ்நீத் ராணா கவுர், பாஜகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதே தொகுதியில் நவ்நீத்துக்கு அக்கட்சியின் சார்பில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தொகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

நவ்நீத் கவுர் ராணா
நவ்நீத் கவுர் ராணாட்விட்டர்

இந்த நிலையில், தன் வீட்டில் வேலை செய்து வரும் பீகாரைச் சேர்ந்த அர்ஜுன் முகியா என்பவர், ரூபாய் 2 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினர், “ரூபாய் 2 லட்சத்தைத் திருடிச் சென்றுள்ளதாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர் தற்போது தலைமறைவாகி உள்ளார். நாங்கள் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: உயிருக்குப் போராடிய கணவர்.. பார்க்கப் புறப்பட்ட மனைவி.. விமானம் ரத்தானதால் நிகழ்ந்த சோகம்!

நவ்நீத் ராணா கவுர்
“ஜெய்ஸ்ரீராம் எனச் சொல்லாவிட்டால்” - எனக்கூறி சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர் நவ்நீத் கவுர் ராணா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com