ராம நவமி ஊர்வலம்: 4 மாநிலங்களில் கலவரம் - ஒருவர் பலி

ராம நவமி ஊர்வலம்: 4 மாநிலங்களில் கலவரம் - ஒருவர் பலி
ராம நவமி ஊர்வலம்: 4 மாநிலங்களில் கலவரம் - ஒருவர் பலி

ராம நவமி நாளில் 4 மாநிலங்களில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று ராம நவமி கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி நடந்த ஊர்வலங்களின்போது மத்தியப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் கலவரம் வெடித்தது.

மத்தியப்பிரதேசம் மாநிலம் தலப் சவுக் பகுதியில் தொடங்கிய ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியின் வழியாக சென்றபோது அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து இருதரப்பினரும் மோதிக் கொள்ள காவல்துறையினர் அங்கு விரைந்தனர். போலீஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு, கல் வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. ஊர்வலம் பாதியிலேயே தடைப்பட்டது. அப்பகுதியில் 4 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. கோயில் ஒன்று சூறையாடப்பட்டது. இதனையடுத்து தலப் சவுக் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் கம்பத், சபர்கந்த் மாவட்டங்களில் ராம நவமி ஊர்வலங்களில் மோதல் வெடித்தது. கல்வீச்சு சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசிக் கலைத்தனர். இதில் கம்பத் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் மீட்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் சிவ்பூர் பகுதியில் மோதல் ஏற்பட்டதால், போலீசார் அங்குக் குவிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். லோஹர்டக் பகுதி முழுமையும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிக்க: திருடுப்போன 500 டன் பாலம்; சிக்கிய அரசு அதிகாரி - பீகாரில் அதிர்ச்சி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com