`சட்டமும் கிடையாது.. ஒழுங்கும் கிடையாது!’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

`சட்டமும் கிடையாது.. ஒழுங்கும் கிடையாது!’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike
`சட்டமும் கிடையாது.. ஒழுங்கும் கிடையாது!’- வாசகர்களின் கமெண்ட்ஸ் #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 15-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக அச்சுறுத்தும் புல்டோசர் அரசியல்… சட்ட நடைமுறைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றனவா? ' எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.

பாஜக ஒன்றும் ஆக்க சக்தி அல்ல. ஒன்று எதையாவது இடிக்கும் அல்லது ஏற்கெனவே இருந்ததை விற்பனை செய்யும். எதையும் உருவாக்க தெரியாது

சட்டமும் கிடையாது ஒழுங்கும் கிடையாது சுப்ரீம் கோர்ட்டு வேடிக்கை பார்க்கிறது அருமையான இந்தியா

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை , அந்நியயர்கள்போல சித்தரிப்பது...பெரிய சாபம்...நாளை அது நம் தலைமுறைகளை பழிவாங்கும்… புல்டோசர் கொண்டு இடிப்பது வீட்டை அல்ல..நம் நாட்டின் ஜனநாயகத்தை.. இதை நியாயப்படுத்தும் நபர்களை தெரிந்து கொள்ளுங்கள்.. ஒரு சமூகத்தை ஒடுக்க புல்டோசர் ஒரு ஆயுதம் தான்... ஆயுதம் இன்று உங்கள் கையில்...நாளை எதிரில் நிற்பவர்கள் கையில் போகும்...அன்று நாமெல்லாம் இருக்கமாட்டோம்...நம் பேரன் பேத்திகள் இருப்பார்கள்...

Nellai D Muthuselvam

காவல்துறையை தாக்குவதற்கும் , பொது மக்களை தாக்குவதற்கும் எந்த சட்டவிதி அனுமதிக்கிறது. எத்தகைய நபர்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை எடுக்கிறது உத்தரப்பிரதேச அரசு என்பதை முதலில் பார்க்க வேண்டும். தொடர்ந்து பொது அமைதிக்கு தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக நடக்கிறது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் அறிந்தும் வருவதில்லை. நீதிமன்றம் இருக்கு அங்கே நியாயம் கிடைக்கவில்லை என்றால் கூட போராடலாம். ஆனால் சட்டத்தை நம்பாமல் வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.

ஐயா முன்னாள் நீதிபதி அவர்களே பொது சொத்தையும் தனிநபர் சொத்துகளையும் சேதப்படுத்துவது எந்த மதத்தினராக இருந்தாலும் தவறு. அதுபோல் ஜாதிக் கட்சியை வைத்து நடத்தும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். அப்படி என்றால் சேதப்படுத்திய பொருட்களுக்கு யார் பொறுப்பு

தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திலிருந்த போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த நூற்றுக்கணக்கான கோயில்கள் இடிக்கப்பட்டது, அதுபோல்தான் கலவரக்காரர்கள் ஆக்கிரமித்த ஆக்கிரமிப்புகள் தான் இடிக்கப்பட்டது

இன்றைக்கான லைக் டிஸ்லைக் கேள்வி, இன்று இரவு 7 மணிக்கு புதிய தலைமுறையின் சமூகவலைதள பக்கங்களில் வெளியாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com