ரகசிய இடத்தில் வைத்து 3 பேரிடம் கோவை போலீசார் விசாரணை

ரகசிய இடத்தில் வைத்து 3 பேரிடம் கோவை போலீசார் விசாரணை
ரகசிய இடத்தில் வைத்து 3 பேரிடம் கோவை போலீசார் விசாரணை

பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரிடம் கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முக்கிய இடங்களான கோயில்கள், விமான நிலையங்கள் என பல இடங்களிலும் போலீசார் தங்களது பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரிடம் கோவை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூவரில் இரண்டு பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கோவையை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com