\
18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்கிறதா காக்னிசண்ட் ?

18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்கிறதா காக்னிசண்ட் ?

18 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்கிறதா காக்னிசண்ட் ?
Published on

நாட்டின் மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசண்ட் நிறுவனம் சுமார் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காக்னிசண்ட் நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அதில், 70 சதவிகிதம் பேர் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காக்னிசண்ட் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களில் 18 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, முகநூல் பதிவுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுபவர்களில் சுமார் 6 ஆயிரம் பேரையும், ஓரளவு அதிக அனுபவம் உள்ள ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது. 

ஃபேஸ்புக் பதிவுகளை ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொ‌ள்ளும் ஒப்பந்தங்களிலிருந்து காக்னிசண்ட் நிறுவனம் வெளியேறும் நிலையில், வரும் காலங்களில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரைன் ஹம்ப்ரிஸ் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com