காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்

காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்

காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்
Published on

சித்தார்த்தா மரணத்தை அடுத்து காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். காபி டே-யின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன.

தன்னுடைய நிறுவனங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மங்களூரில் உள்ள நேத்ராவதி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து அவர் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. நீண்ட தேடுதலுக்குப் பின் நேத்ராவதி ஆற்றில் சித்தார்த்தாவின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், சித்தார்த்தாவின் திடீர் மரணத்தை அடுத்து காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரங்கநாத் தற்போது காபி டே நிறுவனத்தின் நிர்வாகமற்ற தனி இயக்குநராக உள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com