அதிகரிக்கும் மின்வெட்டுக்கு நிலக்கரி தட்டுப்பாடு காரணமா?

அதிகரிக்கும் மின்வெட்டுக்கு நிலக்கரி தட்டுப்பாடு காரணமா?
அதிகரிக்கும் மின்வெட்டுக்கு நிலக்கரி தட்டுப்பாடு காரணமா?

நாடெங்கும் நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மின்வெட்டுக்கு வழிவகுத்துள்ளது.

நாடெங்கும் பல்வேறு வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் நிலக்கரியை கொண்டு செய்யப்படும் மின் உற்பத்திதான் மிகவும் அதிகம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே நிலக்கரி விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரை தொடர்ந்து அது இன்னும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.



நிலக்கரி பற்றாக்குறை பிரச்னை தீவிரமடையும் என்றும் இதன் தொடர்ச்சியாக நாடெங்கும் மின்வெட்டு அதிகரிக்கும் என்றும் மின்சார பொறியாளர்கள் கூட்டமைப்பு சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தது. குறிப்பாக ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், ஜார்கண்ட், ஹரியானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிரமடையும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங், நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் நிலைமையை சமாளிப்பது குறித்து அவசர ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே நிலக்கரி பிரச்னையை அரசு சரியாக கையாளவில்லை எனவும் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இந்நிலையில் 30 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளதாகவும் எனவே அச்சம் தேவையில்லை எனவும் மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.



நிலக்கரி உயர்வு மட்டுமல்லாமல் அதை மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்ல ரயில் பெட்டிகள் பற்றாக்குறையும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில் மின் வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்பலாம்.

இதையும் படிக்க:நிலக்கரி பற்றாக்குறையால் 12 மாநிலங்களில் மின் பிரச்னை: மகாராஷ்டிர அமைச்சர் 


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com