“நிலக்கரி பற்றாக்குறையே இல்லை, வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை” - நிர்மலா சீதாராமன்

“நிலக்கரி பற்றாக்குறையே இல்லை, வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை” - நிர்மலா சீதாராமன்

“நிலக்கரி பற்றாக்குறையே இல்லை, வெளியாகும் தகவல்கள் ஆதாரமற்றவை” - நிர்மலா சீதாராமன்
Published on

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை நிலவுகிறது என்ற தகவல்கள் பரவிவரும் சூழலில், இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை, இதுபற்றிய அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், “இந்தியா ஒரு மின் உபரி நாடு. மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதாக பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றது என்று தெரிவித்தார். அமைச்சரின் அறிக்கையின்படி மின்சாரம் தயாரிக்கும் ஒவ்வொரு நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு அந்தந்த ஆலைகளிலேயே உள்ளது. மேலும், நாட்டின் நிலக்கரி  விநியோகச் சங்கிலியில் எந்த பாதிப்பும் இல்லை” எனத் தெரிவித்தார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com