5G servicept desk
இந்தியா
“5ஜி சேவையில் போதிய வருவாய் கிடைக்கவில்லை” - செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம்
இந்தியாவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அதிவேகமாக தரப்பட்டாலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் குறைவாகவே இருப்பதாக செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளன.
5ஜி செல்போன் சேவை கடந்தாண்டு தொடங்கப்பட்ட நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அச்சேவை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய செல்போன் சேவை நிறுவனங்களின் இயக்குநரான எஸ்.பி.கோச்சார், “உலகிலேயே 5ஜி சேவை வேகமாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதில் இந்தியாதான் முதலிடம் வகிக்கிறது.
5G servicept desk
5ஜி சேவையை பரவலாக கொண்டு செல்வதற்காக மிகப்பெரிய அளவில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பெரும் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளுக்கேற்ற வருவாய் இன்னும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.