\
பிரதமர் மோடி தொடங்கிவைத்த ரயிலில் சிவனுக்கென ஓரிடம்!

பிரதமர் மோடி தொடங்கிவைத்த ரயிலில் சிவனுக்கென ஓரிடம்!

பிரதமர் மோடி தொடங்கிவைத்த ரயிலில் சிவனுக்கென ஓரிடம்!
Published on

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ரயிலில் சிவனுக்காக ஓரிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாரணாசி, உஜைன் மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் உள்ள சிவன் தலங்களை இணைக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இயக்கப்படும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில், சிவனுக்காக பி-ஐந்தாவது கோச்சில், 64-வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர், சிவன் தலங்களை இணைக்கும் இந்த ரயிலில் சிவனுக்காக இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை நிரந்தரமாக கடைபிடிப்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் லக்னோ வழியாக 1,131 கிலோமீட்டர் தூரத்தையும், ப்ரயாக்ராஜ் வழியாக 1,102 கிலோ மீட்டர் தூரத்தையும் 19 மணி நேரத்தில் கடக்கும். குறைவான சத்தத்தில் சாமி பாடல்கள், பாதுகாவலர்கள், சைவ உணவு, ஏசி வகுப்புகள் என இந்த ரயிலில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாரத்திற்கு 3 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயிலில் சிவனுக்கு இடம் ஒதுக்கப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com