\
ப்ளையிங் கிஸ் கொடுத்த முதல்வர்

ப்ளையிங் கிஸ் கொடுத்த முதல்வர்

ப்ளையிங் கிஸ் கொடுத்த முதல்வர்
Published on

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ இணையவாசிகள் மத்தியில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது வழக்கம் போல மக்களிடம் குறைகளை கேட்டார். அவர்கள் கொடுத்த மனுக்களை பெற்றுக்கொண்டார். இவர் எளிதில் அனுகக்கூடிய முதல்வர். அதிகக் கட்டுப்பாடுகள் இருக்காது என்று பெயரெடுத்தவர். எந்த நேரத்திலும் தொண்டர்களிடம் நேரடியாக அணுகி கட்சி நிலவரங்களை அலசி ஆராய்ந்து கொள்வது இவரது ஸ்டைல். இதனால் இவரை எல்லோரும் மாமாஜி என்று அழைக்க தொடங்கினர். நம்மூரில் ’அம்மா’, ‘சின்னம்மா’ என பட்டம் போட்டு அழைப்பதை போல இது. 
இந்நிலையில் இன்று அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஒரு தொண்டர் அவரை ’ஐ லவ் யு’ என பலரும் கேட்கும் படியாக குரல் எழுப்பி தனது அன்பை வெளிப்படுத்தினார். அதனை கேட்ட முதல்வர் சிவராஜ் சிங் மேடையில் நின்றபடியே அந்தத் தொண்டருக்கு ப்ளையிங் கிஸ் கொடுத்தார். அந்த வீடியோ பதிவை அந்த ஊர் மக்கள் மிக உற்சாகமாக வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக வலைதங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com