இந்திரகுமாரி மறைவு | “தீராத் தமிழ்ப்பற்றுடன் இயங்கியவரின் மறைவு இலக்கிய உலகிற்கு பேரிழப்பு”

முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலகுறைவினால் காலமானார்.
இந்திரகுமாரி மறைவு - முதல்வர் மரியாதை
இந்திரகுமாரி மறைவு - முதல்வர் மரியாதைபுதிய தலைமுறை

முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி தலைவருமான இந்திரகுமாரி உடல்நலகுறைவினால் காலமானார். சிறுநீரக பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 74. இந்திரகுமாரியின் உடல் அஞ்சலிக்காக அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

திமுக இலக்கிய அணி தலைவர் இந்திரகுமாரி உடல்நலகுறைவினால் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
திமுக இலக்கிய அணி தலைவர் இந்திரகுமாரி உடல்நலகுறைவினால் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

இந்திரகுமாரி அதிமுக சார்பில் நாற்றாம்பிள்ளை தொகுதியிலிருந்து 1991ம் ஆண்டு எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இவர் 2006ல் தி.மு.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவருக்கு திமுகவில் இலக்கிய அணி மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழக இலக்கிய அணித் தலைவர் புலவர் இந்திரகுமாரி அவர்கள் மறைந்த துயரச் செய்தி வந்து சோகத்தில் ஆழ்த்தியது. நெடிய அரசியல் அனுபவம் கொண்டவரான புலவர் இந்திரகுமாரி அவர்கள் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்குப் பணியாற்றியவர்.

தீராத் தமிழ்ப் பற்றுடன் இலக்கிய வெளியில் இயங்கியவர். அவரது மறைவு கழகத்திற்கும் இலக்கிய உலகிற்கும் பேரிழப்பாகும்.

புலவர் இந்திரகுமாரி அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் இன்று நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com