‘ஒரே மாநிலம் - ஒரே நீர்’ கொள்கையை ஆந்திர முதல்வர் முன்மொழிந்துள்ளார்web
இந்தியா
ஆந்திராவில் ‘ஒரே மாநிலம் - ஒரே நீர்’ திட்டம்.. முன்மொழிந்த ஆந்திர முதல்வர்!
ஆந்திராவில் ‘ஒரே மாநிலம் - ஒரே நீர்’ கொள்கையை ஆந்திர முதல்வர் முன்மொழிந்துள்ளார்.
ஆந்திராவை வறட்சி இல்லாத மாநிலமாக மாற்ற, ‘ஒரே மாநிலம்-ஒரே நீர்’ என்ற புதிய கொள்கையை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளார்.
‘ஒரே மாநிலம்-ஒரே நீர்’ திட்டத்தின் நோக்கம் என்ன?
கோதாவரி, கிருஷ்ணா போன்ற நதிகளின் உபரி நீரை, மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்தார்.
சந்திரபாபு நாயுடுமுகநூல்
இதற்காக, 2029க்குள் நிலுவையில் உள்ள அனைத்து பாசனத் திட்டங்களையும் முடிக்க, 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
குறிப்பாக, போலாவரம் திட்டத்தை 2027 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.