’சினிமாவை பார்த்து செய்தேன்..’ 20 முறை குத்திய 10ம் வகுப்பு மாணவன்.. ரத்தவெள்ளத்தில் 12 வயது சிறுமி!
சினிமாவை பார்த்து கொலை செய்தேன்
ஹைதராபாத்தில் 12 வயது சிறுமியை கொன்ற 10-ம் வகுப்பு மாணவன்
சினிமாவின் வன்முறை காட்சிகளால் அரங்கேறிய கொடுமை
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் குகட்பள்ளி பகுதியை சேர்ந்த கிருஷ்ணா-ரேணுகா தம்பதியரின் 12 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த போது கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை தந்தையும் தாயும் வேலைக்கு சென்ற நிலையில், தம்பியும் பள்ளிக்கு சென்றுவிட்டுள்ளார். இதனால் 12 வயது சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நண்பகலில் மகனுக்கு மதிய உணவு எடுத்து செல்ல தந்தை கிருஷ்ணா வீட்டுக்கு வந்த போது மகள் ரத்த வெள்ளத்தில் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த குகட்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில், 4 நாட்களுக்கு பிறகு விசாரணையில் திடுக்கடும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீட்டு 10-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
வெளியான அதிர்ச்சிகரமான உண்மை..
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் ஒருவன் அந்த நேரத்தில் சுற்றி திரிந்தது தெரியவரவே, கொலையாளியை அந்த சிறுவன் பார்த்திருக்கக்கூடும் என விசாரணை செய்த போது, பக்கத்து வீட்டு 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் என தெரியவந்தது.
இதனையடுத்து அந்த சிறுவனிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்ததில் சந்தேகம் அடைந்த போலீசார், விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், சிறுமியை கொலை செய்ததை ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.
திரைப்படங்களில் வன்முறை காட்சிகளை அதிகம் பார்த்து, எப்படி திருடுவது என டைரியில் எழுதி வைத்துள்ளதாகவும், சம்பவம் நடந்த திங்கட்கிழமை அன்று வீட்டில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி, சிறுமியின் வீட்டுக்குள் நுழைந்த அந்த சிறுவன் ரூ.80,000 பணத்தை திருடிக்கொண்டு, தப்பி சென்ற போது சிறுமி பார்த்து விட்டதால் 20 இடங்களில் சிறுமியை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றதாகவும்,
மேலும், கத்தி, துணி மற்றும் டைரி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.