"பாக். சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தர காந்தி உறுதியளித்தார்" நிதின் கட்கரி

"பாக். சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தர காந்தி உறுதியளித்தார்" நிதின் கட்கரி
"பாக். சிறுபான்மையினருக்கு அடைக்கலம் தர காந்தி உறுதியளித்தார்" நிதின் கட்கரி

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்தியா அடைக்கலம் தரும் என மகாத்மா காந்தி உறுதியளித்திருந்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாக்பூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய கட்கரி, சுதந்திரத்துக்குப் பின் பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மையினர் அச்சுறுத்தப்பட்டால் அவர்களுக்கு இந்தியா பாதுகாப்பு அளிக்கும் என மகாத்மா காந்தி உறுதியளித்திருந்ததை தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உள்துறை அமைச்சர் சர்தார் படேலே இதற்கு சாட்சி என கட்கரி தெரிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் என தனித்தனி நாடாக பிரிந்த நேரத்தில் பாகிஸ்தானில் 22 சதவிகித இந்துக்கள் இருந்ததாகவும் தற்போது மூன்று சதவிகித மக்களே இருப்பதற்கு காரணம் என்ன என்று வினவினார். பாலியல் வன்கொடுமை, கொலை, கட்டாய மத மாதற்றத்தால் அங்குள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பில்லை என்ற காரணத்தாலேயே குடியுரிமை திருத்த சட்டம் என்றும் இது இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும் தெரிவித்த கட்கரி, இதை காங்கிரஸ் தவறாக பரப்புரை மேற்கொண்டு வருவதாக சாடினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com