கேமரா இருந்தும் ’சிஐடி’ வீட்டில் கொள்ளை!

கேமரா இருந்தும் ’சிஐடி’ வீட்டில் கொள்ளை!

கேமரா இருந்தும் ’சிஐடி’ வீட்டில் கொள்ளை!
Published on

குற்ற நிகழ்ச்சிகளை வெளிக்கொண்டு வரும் டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர் வீட்டில் மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி, ’சிஐடி’. பல்வேறு குற்றச்சம்பவங்களை வெளிக்கொண்டு வரும் இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் பிரதீப் உப்பூர். இவர் சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

இவர் வீடு, மும்பை ஜுஹூ பகுதியில் உள்ள சில்வர் பீச் அபார்ட்மென்டில் உள்ளது. ஆறாவது மாடியில் உள்ள இவரது வீட்டில், ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.12 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதுபற்றி பிரதீப்பும் அவர் மனைவி வீணாவும் போலீசில் புகார் தெரிவித்தனர்.

அபார்ட்மென்டில் ஏகப்பட்ட சிசிடிவி கேமரா இருந்தும் இந்தக் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாசலில் இருக்கும் மூங்கில் மரங்களில் ஏறி ஆறாவது மாடிக்கு குற்றவாளிகள் சென்று கொள்ளை அடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com