நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை குதூகலம்; வண்ண விளக்குகளால் மிளிரும் தேவாலயங்கள்!
நாடு முழுவதும் தேவாலயங்களில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டப்பட்டு வருகிறது.
மேற்குவங்கத்தில் Park Street என்ற இடத்தில் அனைத்து மதத்தையும் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். அந்த இடம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இயேசு பிரான் அவதரித்ததை குறிக்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை.
கோவா மாநிலம் பனாஜியில் உள்ள பிரபலமான தேவாலயத்தில் சமூக இடைவெளியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறைந்த அளவிலான கிறிஸ்தவர்கள் மட்டுமே கலந்துகொண்ட நிலையில், வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றன. கேரளாவின் கொச்சியில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பேராலயம் பல வண்ணங்களிலான ஒளிவண்ணத்தில் மிதந்தன. அந்த ஆலயத்தில் குறைவான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு பிரார்த்தயில் ஈடுபட்டனர். இதேபோல் டெல்லி, மகாராஷ்டிரா, பெங்களூரு உள்பட நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் காணப்பட்டன.