சோழ மன்னர்கள் பெருங்கடல்களை ஆண்டார்கள்: குடியரசு துணைத்தலைவர் பெருமிதம்

சோழ மன்னர்கள் பெருங்கடல்களை ஆண்டார்கள்: குடியரசு துணைத்தலைவர் பெருமிதம்
சோழ மன்னர்கள் பெருங்கடல்களை ஆண்டார்கள்: குடியரசு துணைத்தலைவர் பெருமிதம்

சோழ மன்னர்கள் பெருங்கடல்களை ஆண்டார்கள், அத்தகைய நிலையை நாம் மறுபடியும் எட்ட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, நாட்டின் லட்சியமிக்க இலக்குகளை எட்டுவதில் துறைமுகங்களுக்கு உள்ள முக்கிய பங்கு குறித்து விளக்கிய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்தியாவை முன்னணி கடல்சார் நாடாக ஆக்க அழைப்பு விடுத்தார்.

விசாகப்பட்டினத்தில் குடியரசு துணைத் தலைவர் உடனான உரையாடலின்போது, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தின் தலைவர் ராம மோகன ராவ் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் விளக்கக்காட்சி ஒன்றை வழங்கினர். விரிவாக்கத் திட்டங்கள் உள்பட துறைமுகத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து குடியரசு துணைத் தலைவரிடம் அவர்கள் விளக்கினர்.

அப்போது பேசிய வெங்கையாநாயுடு, சுமார் 7,517 கிலோ மீட்டர் நீள கடற்கரை மற்றும் 200க்கும் மேற்பட்ட முக்கிய மற்றும் சிறு துறைமுகங்களுடன், உலகின் முக்கிய கப்பல் வழித்தடங்களில் இந்தியா இடம் பெற்றிருப்பதாக கூறியதோடு, இந்திய பொருளாதாரத்தில் இந்த துறைமுகங்கள் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.

பண்டைய இந்தியா மிகப்பெரிய கடல்சார் சக்தியாக திகழ்ந்ததாக நினைவுக்கூர்ந்த குடியரசு துணைத் தலைவர், சோழ மற்றும் கலிங்க மன்னர்கள் பெருங்கடல்களை ஆண்டார்கள் என்றும் அத்தகைய நிலையை நாம் மறுபடியும் எட்ட வேண்டும் என்றும் கூறினார்.

நாட்டின் துறைமுக உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து பேசிய அவர், லட்சியம் மிகுந்த சாகர்மாலா திட்டத்தின் ஒரு பகுதியாக 504க்கும் அதிகமான திட்டங்கள் துறைமுகம் சார்ந்த மேம்பாட்டு வாய்ப்புகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,3.57 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உள்கட்டமைப்பு முதலீட்டை இந்த திட்டங்கள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

இந்திய கடல்சார் லட்சியம் 2030 குறித்து பேசிய குடியரசு துணைத் தலைவர், செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சியில் சர்வதேச சிறந்த நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார். இந்திய கடல்சார் லட்சியம் 2030 எட்ட முடியாத ஒன்று அல்ல என்று தெரிவித்த அவர், இந்தியாவிடம் அறிவின் சக்தி இருப்பதாகவும் ஒன்றுபட்ட நோக்கத்துடன் அனைவரும் பணிபுரிய வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com