பவன் கல்யாண்
பவன் கல்யாண்புதியதலைமுறை

ஆரத்தழுவிய சிரஞ்சீவி... திக்குமுக்காடிய பவன் கல்யாண்!

தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாணுக்கு சிரஞ்சீவி குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
Published on

நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 சட்டப்பேரவை மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. பிதாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் வெற்றிபெற்றுள்ளார்.

பவன் கல்யாண்
இனி கூட்டணிதான்... விஜயகாந்த், பவன் கல்யாண் பாணி - பாதையை மாற்றுகிறாரா சீமான்?

இந்நிலையில் தனது சகோதரரான நடிகர் சிரஞ்சீவி வீட்டிற்கு பவன் கல்யாண் நேற்று சென்றார். அப்போது, சிரஞ்சீவி குடும்பத்தினர் ரோஜா மலர்களால் பவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பவன் கல்யாணை ஆரத்தழுவிய சிரஞ்சீவி, பிரமாண்ட மாலையை அவருக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கேக் வெட்டி தேர்தல் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் சிரஞ்சீவி, ராம்சரன், வருண் தேஜ், நாகேந்திர பாபு, இவர்களின் மனைவிகள், பிள்ளைகள் என பலபேர் இருந்தனர். இந்நிகழ்வில் தன்னைவிட மூத்தவர்கள் அனைவரின் காலிலும் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிபெற்றார் பவன் கல்யாண்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com