\
சின்மயானந்தா வழக்கு: புகாரளித்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு

சின்மயானந்தா வழக்கு: புகாரளித்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு

சின்மயானந்தா வழக்கு: புகாரளித்த மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உத்தரவு
Published on

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா மீது பாலியல் புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியை வேறு கல்லூரிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் சஹ்ஜஹன்பூரில் உள்ள சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் சின்மயானந்தாவுக்கு எதிராக மறைமுகமாக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். வீடியோ வெளியிட்ட பின்னர் மாயமான அந்த மாணவி, பின்னர் ராஜஸ்தானில் இருந்து மீட்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனிடையே அந்த மாணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் சின்மயானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி, அவரது சகோதரரை வேறுவொரு கல்லூரிக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிககள் ஆர்.பானுமதி மற்றும் ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு பார் கவுன்சிலுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தங்களைப் பொறுத்தவரை அவர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன்பாக டெல்லியில் இருந்த அந்த பெண்ணின் பாதுகாப்பு குறித்தும் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com