சீனப் படைகள் 2 கிமீ தூரத்திற்கு பின்நோக்கி சென்று விட்டன - மத்திய அரசு மூத்த அதிகாரி

சீனப் படைகள் 2 கிமீ தூரத்திற்கு பின்நோக்கி சென்று விட்டன - மத்திய அரசு மூத்த அதிகாரி
சீனப் படைகள் 2 கிமீ தூரத்திற்கு பின்நோக்கி சென்று விட்டன - மத்திய அரசு மூத்த அதிகாரி

கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் சீனப் படைகள் 2 கிமீ தூரத்திற்கு பின்நோக்கி சென்று விட்டதாக மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 15-ஆம் தேதி இரவு கல்வான் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலில், இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன தரப்பு இந்த தாக்குதலை முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தியதாகவும், இதன் விளைவாக ஏற்படும் வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு சீன ராணுவம்தான் நேரடி பொறுப்பு எனவும் சாடியது.

ராணுவ வீரர்களில் சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர். ஆற்றில் அடித்து சென்று காணாமல் போன உடல்களை தேடிவந்ததாகவும், சுமார் 20 ராணுவ வீரர்கள் இதில் பலியாகி உள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் இந்திய ராணுவம் அறிக்கை வெளியிட்டது.  இந்த விவகாரம் குறித்தும் சீன வீரர்களின் உயிரிழப்புகள் குறித்தும் அந்நாட்டு அரசு இதுவரை வாய்திறக்கவில்லை.

இந்நிலையில் இந்திய-சீன படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில் இருந்து சீனப் படைகள் 2 கிமீ தூரத்திற்கு பின்நோக்கி சென்று விட்டதாக மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேசியுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இரு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட தற்காலிக கட்டுமான அமைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. நேரடியாக அப்பகுதிக்கே சென்று பார்த்து இது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com