இந்தியாவில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய சீன கார் நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய சீன கார் நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய சீன கார் நிறுவனம் திட்டம்!
Published on

சீனாவின் எம்.ஜி. மோட்டார் நிறுவனம், தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை ரூ.1000 கோடியில் இந்தியாவில் தொடங்க முன்வந்துள்ளது.

சீன ஆட்டோமொபைல் நிறுவனமான எம்.ஜி மோட்டார், சீனாவின் எஸ்.ஏ.ஐ.சி மோட்டர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்தியா முழுக்க எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மொத்தம் 150 மைங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விற்பனை மையங்களின் எண்ணிக்கையை 250 வரை படிப்படியாக உயர்த்த எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம், தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை, ரூ.1000 கோடியில் இந்தியாவில் தொடங்க முன்வந்துள்ளது. எனினும் இதில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

சமீபத்தில் சீனா உள்ளிட்ட உள்ளிட்ட நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (டிபிஐஐடி) ஒரு உத்தரவு பிறப்பித்தது. இதனால் மத்திய அரசின் அனுமதிக்காக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் காத்திருக்கிறது.  

சீனாவுக்கு எதிரான உணர்வலைகள் வணிகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று எம்ஜி மோட்டார் இந்திய நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ராஜீவ் சாபாவிடம் கேட்டதற்கு, ‘’நாட்டுக்கு எது நல்லது என்பதை தீர்மானிக்க அரசாங்கத்திற்கு முழு உரிமையும் பொறுப்பும் உள்ளது. எந்தவொரு அரசாங்கமும் நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும். இந்திய அரசு அனைத்து சரியான காரியங்களையும் செய்து வருகிறது

சீனாவுக்கு எதிரான உணர்வலைகள் குறுகிய கால விளைவுகளாக இருக்கக்கூடும். பல்வேறு நாடுகளில் வேறுபாடுகள் உள்ளன என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. ஆனால் அது வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம்.

எம்.ஜி நிறுவனமானது பழைய பிரிட்டிஷ் பிராண்ட் ஆகும். இது சீனாவின் எஸ்.ஏ.ஐ.சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com