\
காலணி அட்டைப் பெட்டியில் தேசியக் கொடி படம்

காலணி அட்டைப் பெட்டியில் தேசியக் கொடி படம்

காலணி அட்டைப் பெட்டியில் தேசியக் கொடி படம்
Published on: 

உத்தராகண்ட் மாநிலத்தில் தேசியக் கொடி படம் கொண்ட பெட்டியில் வைத்து காலணிகள் விற்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டேராடூன் அருகிலுள்ள அல்மோராவில் கடை ஒன்றில் காலணி வாங்க வந்த ஒருவர் அது தேசியப் படம் கொண்ட பெட்டியில் வைத்து வழங்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடையில் நடத்திய சோதனையில் இந்திய கொடி உள்ள 12 பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தேசியக்கொடி அவமதிப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சீனாவிலிருந்து இந்த பெட்டிகள் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com