எல்லையிலிருந்து படைகளை இந்தியா உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார்.
எல்லையில் படைகளை குவித்த விவகாரத்தில் இந்திய அரசு தவறான மாயைகளையும் அதிர்ஷ்டத்தையும் நம்பியிருக்கக் கூடாது என சீனா எச்சரித்துள்ளது. எல்லைகளை பாதுகாக்கும் திறன், சீன ராணுவத்துக்கு உள்ளது என்பது 90 ஆண்டு வரலாறு என தெரிவித்த சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வு கியான், சீன ராணுவம் மலையை போன்றது என்றும் அதை யாராலும் அசைக்க முடியாது என்றும் கூறினார்.
இந்திய - சீன எல்லையில் உள்ள டோக்லா பகுதியல் சீனா சாலை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அப்பகுதியில் இந்தியா அதிகளவில் படைகளை குவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஒரு மாதமாக பதற்றமான நிலை நிலவி வருகிறது