\
இந்தியப் படையினர் உடனான 'கல்வான்' மோதல் வீடியோவை வெளியிட்டது சீனா!

இந்தியப் படையினர் உடனான 'கல்வான்' மோதல் வீடியோவை வெளியிட்டது சீனா!

இந்தியப் படையினர் உடனான 'கல்வான்' மோதல் வீடியோவை வெளியிட்டது சீனா!
Published on

2020 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி இந்திய-சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை சீனா தற்போது வெளியிட்டிருக்கிறது.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லையில் உள்ள கல்வானில் இரு நாடுகளும் கடந்த ஆண்டு மோதிக்கொண்டபோது இந்திய ராணுவத்தின் தரப்பில் 20 பேர் உயிரிழந்தனர். ஆனால் அப்போது சீனத் தரப்பின் உயிரிழப்பு பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று கல்வான் மோதலில் தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சீனா.

இந்தச் சூழலில் கல்வான் பகுதியில் நடந்த மோதல் சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இதில் இந்திய துருப்புகள்தான் சீன எல்லையில் அத்துமீறின என சீனத் தரப்பால் குற்றம் சாட்டிப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com